நடிகர் மற்றும் கலை இயக்குனராகவும் பணியாற்றி வரும் கிரண் டிவிட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட புகாரால் பதிலளித்த சென்ன விமான நிலைய அதிகாரிகள்.
தமிழ் சினிமாவில் நடிகராகவும் கலை இயக்குனராகவும் பணியாற்றி வருபவர் கிரண். அவர் வேலையில்லா பட்டதாரி, வலிமை, வாரிசு திரைப்படங்களிலும் நடிகராக நடித்துள்ளவர். இரண்டாம் உலகம், டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் கலை இயக்குனராகவும் பணியாற்றியவர்.
சமீபத்தில் சென்னை விமான நிலையம் சென்ற அவர் அங்கு வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பார்த்து சென்னை விமான நிலையம் குறித்து சமூக வலைதளங்கத்தின் மூலமாக கேள்வி எழுப்பினார். இதை பலரும் டேக் செய்து கேள்வி எழுப்பி வந்தனர்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை விமான நிலையத்தில் மற்ற நாட்டில் உள்ள சிறந்த இடங்களின் படங்களை வைத்துள்ளார்கள்; ஏன்? தமிழ்நாட்டில் சிறந்த இடங்கள் இல்லையா? இல்லை அவர்களுக்கு தெரியவில்லையா? இது தமிழ்நாட்டின் விமான நிலையம் தானே? வேறு ஊரில் இப்படி இல்லையே? இங்கு மட்டும் ஏன் இப்படி? விமான நிலையத்திற்கு தான் பல மாநிலங்களில் இருந்தும் பல நாட்டில் இருந்தும் மக்கள் வருகிறார்கள். அவர்களுக்கு நம் கலாச்சாரமும் நமது கலை மற்றும் பண்பாட்டையும் நாம் தானே காட்ட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவ ஆரம்பித்ததும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் அளித்த பதிவில், “உங்கள் கருத்து குறித்து ஆலோசிக்கப்படும். வரும் நாட்களில் அந்த புகைப்படங்கள் மறுசீரமைக்கப்படும். மேலும் தமிழகத்தின் சிறந்த இடங்களுக்கு விமான நிலையத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
இதையும் படியுங்கள்: மூன்றாம் பாலினத்தவருக்கு நாட்டிலேயே முதன் முறையாக குழந்தை பிறந்தது
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.