ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் உருவாகிய படம் காந்தாரா இப்படத்தில் கதாநாயகனாகவும் அவரே நடித்துள்ளார் அப்படத்தை அனைவரும் பாராட்டி வரும் தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் அவரை வீட்டிற்கு அழைத்து அவரை பாராட்டி உள்ளார்.
காந்தாரா இப்படம் முதலில் கர்நாடக மொழியில் மட்டுமே வெளியான நிலையில் படத்தின் வெற்றியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப் செய்து கடந்த 30ம் தேதி வெளியானது. இப்போது இப்படம் மெல்ல மெல்ல வெற்றியடையந்து வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
இப்படத்தை பார்த்த முக்கிய நபர்களும் பாராட்டி வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் இப்படத்தை பார்த்து விட்டு அதில், ‘தெரிந்ததை விட தெரியாதது தான் அதிகம் என்பதை சினிமாவில் ‘காந்தாரா’ படத்தை விட யாரும் தெளிவாக சொல்லியிருக்க முடியாது. கூஸ்பம்ப் தருணத்தை கொடுத்துள்ளீர்கள் ரிஷப் ஷெட்டி. எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகராக உங்களுக்கு வாழ்த்துகள் ரிஷப். இந்திய சினிமாவில் இந்த தலைசிறந்த படைப்பின் ஒட்டுமொத்த நடிகர்களுக்கும், குழுவினருக்கும் வாழ்த்துக்கள்” என்று பாராட்டி இருந்தார்.

இந்த நிலையில், காந்தாரா படத்தின் எழுத்தாளரும் கதாநாயகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டியை தன் வீட்டிற்கு அழைத்து அவரை பாராட்டி இருவரும் கலந்து ஆலோசனை செய்தது சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கின்றது. எந்த படம் நன்றாக இருக்கின்றது என்று தன் மனதில் தோன்றும் படக்குழுவினரை நேரிலோ அல்லது போன் மூலமாகவோ நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: அடுத்த 2 படங்களில் லைக்காவுடன் ஓப்பந்தம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த்
இந்நிலையில், ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்தும் நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்து அவரை பாராட்டியிருக்கிறார் ரஜினி. இந்தப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
ரிஷப் ஷெட்டி ரஜினி உடனான சந்திப்பை பகிர்ந்து “ஒரு முறை எங்களைப் புகழ்ந்தால், நூறு முறை உங்களைப் புகழ்வோம். நன்றி ரஜினி சார். எங்களின் காந்தாரப் படத்தைப் பாராட்டியதற்கு நாங்கள் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என்று நெகிழ்ந்துள்ளார்.
இது போன்ற தகவல்களையும் வேறு தகவல்களை பெறவும் தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.