அடுத்த 2 படங்களில் லைக்காவுடன் ஓப்பந்தம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த்

0
10

அடுத்த 2 படங்களில் லைக்கா நிறுவனத்துடன் ஓப்பந்தம் செய்து கொண்டார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.

நடிகர் ரஜினிகாந்த இறுதியாக நடித்த படம் அண்ணாத்த இப்படம் சன் பிக்சர் தயாரிப்பில் உருவாகியது. இப்படத்தில் குஷ்பு, மீனா, லிவிங்ஸ்டன், பாண்டியராஜ், பிரகாஷ்ராஜ், நகைச்சுவை நடிகர் சூரி, கீர்த்தி சுரேஷ், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா என பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

கலவையான மற்றும் தங்கை சென்டிமண்டில் உருவான திரைப்படம் இசையில் இமான் தெரிக்க விட்டிருந்தார். இப்படம் உலகமெங்கும் உள்ள ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.  இயக்குனர் சிவா இயக்கியிருந்தார். இந்நிலையில், பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் தீலிப் குமாருடன் இணைந்து ஜெயிலர் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகின்றார்.

அடுத்த 2 படங்களில் லைக்காவுடன் ஓப்பந்தம் ஆனார் நடிகர் ரஜினிகாந்த்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்றது அங்கு ரசிகர்கள் படையெடுத்து வந்த நிலையில் விரைவாக படக்காட்சிகள் அங்கு எடுக்கப்பட்டு ரஜினி அங்கிருந்து வெளியேறினார். பின்னர், சென்னையில் உள்ள இடங்களில் மீதி படம் எடுக்கப்பட்டு வருகின்றது.

இதையும் படியுங்கள்: விக்ரம் படத்தின் 100 வது நாள் வெற்றி விழா கலைவாணர் அரங்கில்

இந்த நிலையில், அடுத்த இரண்டு படங்களுக்கு லைக்கா நிறுவனத்துடன் இணைந்து நடிக்க இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். லைகா நிறுவனத்தின் சிஇஓ தமிழ் குமரன் நடிகர் ரஜினிகாந்தை இன்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் அடுத்த திரைப்படங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

அதிலும் இரண்டு படங்களுக்கான ஒப்பந்தம் இறுதியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நவம்பர் முதல் வாரம் வெளியாகிறது. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் முடிந்ததும் லைகா நிறுவனத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படம் தொடங்கும். அதற்கான அறிவிப்பை நவம்பர் முதல் வாரம் வெளியிடுகின்றனர்.

ரஜினிகாந்த் ஜெயிலர் படத்திற்கு பிறகு வேறு படங்களில் நடிப்பாரா இல்லையா என்ற கேள்வி இருந்து வந்தது. இந்த நிலையில் லைகா தயாரிப்பில் மட்டும் இரண்டு படங்களில் அவர் நடிக்கிறார் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது போன்ற தகவல்களையும் வேறு தகவல்களை பெறவும் தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here