நடிகர் சந்தானம் துப்பறிவாளனாக ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில்

0
25

நடிகர் சந்தானம் நகைச்சுவைக்கு பெயர் போனவர் தற்போது நகைச்சுவை கலந்த கதாநாயகனாக நிறைய படங்களில் நடித்து வருகின்றார். ஆனால், இப்படத்தில் நகைச்சுவை நடிகராக இல்லாமல் துப்பறிவாளனாக ஏஜெட் கண்ணாயிரம் படத்தில் நடித்து இருக்கிறார்.

சந்தானம் நகைச்சுவை படங்களில் நடித்து இன்று பெரிய அளவில் சினிமா துறையில் வளர்ந்து வந்தவர். விஜய் டிவியில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் லொல்லு சபா நகைச்சுவை நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி இன்று கதாநாயகனாக வளர்ந்து வந்துள்ளார். தற்போது, பல படங்களில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருவதை மட்டுமே குறிகோளாக நடித்து வருகின்றார்.

இவர் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா, ஏ1, டிக்கிலோனா, தில்லுக்கு துட்டு, பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசா ஆத்ரேயா படத்தின் ரீமெக் படமாக இப்படம் வெளியாக உள்ளது.

இதையும் படியுங்கள்: ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியானது

நடிகர் சந்தானம் துப்பறிவாளனாக ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தில்

இப்படத்தை வஞ்சகர் உலகம் என்ற படத்தை இயக்கிய மனோஜ் பிதா இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகியா ரியா சுமன் நடித்துள்ளார். மேலும், குக்வித் கோமாளி புகழ், ஸ்ருதி, ஹரிஹரன், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சந்தானத்தின் பிறந்தநாளன்று இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் எப்போதும் காணப்படும் சந்தானம் போல் இல்லாமல் மாறுப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளாதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இந்த படம் வருகின்ற 25ந் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகின்றது.

இந்த படத்தில் துப்பறிவாளானாக தன் திறமையை நிறுபிப்பவனாகவும் அம்மா மகன் சென்டிமென்ட் ஓன்றும் காணப்படும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வரன் மற்றும் சரவணன் ராமசாமியின் ஓளிப்பதிவு இப்படத்திற்கு உறுதுணையாக இருக்கின்றது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரையிலர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here