விஜய்யுடன் இணைந்து நடித்த அனுபவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார் நடிகர் ஷாம்

0
12

ஷாம். ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது குறித்து நடிகர் ஷாம் அவர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது.

’20 வருடங்களுக்கு முன்பு ‘குஷி’ படத்தில் அவருடன் ஒரே ஒரு காட்சியில் இணைந்து நடித்து இருந்தேன். அதன்பிறகு இப்போது ‘வாரிசு’ படத்தில் படம் முழுவதும் அவருடன் பயணிக்கும் விதமாக அவரது சகோதரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விஜய்யிடம் பேசும்போது, ‘எப்படி அண்ணா நாளுக்கு நாள் இளமை ஆகிக்கொண்டே போகிறீர்கள்? இதற்காக என்ன உணவு கட்டுப்பாடு மேற்கொள்கிறீர்கள் என கேட்டால்?, தினசரி பூரி, பொங்கல் தான் சாப்பிடுகிறேன், எப்பவாவது உடற்பயிற்சி செய்கிறேன்’ என சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

actor shaam share his experience about vijay in varisu movie

படப்பிடிப்பு முடிவடைந்ததும் எங்களை எல்லாம் அவரது வீட்டிற்கு அழைத்து விருந்து காெடுத்து அசத்தினார். ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு பிடித்தமான உணவு ஐயிட்டங்களை அந்த விருந்தில் சேர்த்து இன்னும் ஆச்சரியப்படுத்தினார். அப்போது தன் வீட்டில் உள்ள பணியாளர்களை எல்லாம் ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தன் கையாலேயே அனைவருக்கும் பார்த்து பார்த்து உணவு பரிமாறினார். இது எங்களுக்கு மேலும் ஆச்சிரியமாக இருந்தது’ என்று கூறி நெகிழ்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here