லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகும் ஓரு தெலுங்கு படத்தில் நடிகர் சிம்பு பாடல் பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போன வருடம் வெங்கட் பிரபு இயக்கிய மாநாடு அவருக்கு நல்ல படமாக அமைந்து படக்குழவினருக்கு நல்ல வெற்றியை வழங்கியது.
அதனையடுத்து, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார் சிலம்பரசன். இதற்கிடையே ஓடிடியில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலை அடுத்து சிம்பு தொகுத்து வழங்கி வரவேற்பை பெற்றார்.
அதோடு சிம்பு திருமணத்திற்கும் ரெடி என தெரிகிறது. ஈஸ்வரன் பட நடிகை நிதி அகர்வாலுடன் காதல் கொண்ட சிம்பு விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே STR விளம்பர படத்திலும் தோன்றியுள்ளார். ஆட்டோகாரர் கெட்டப்பில் ஆஹா தமிழ் என்னும் ஓடிடி தளத்தின் விளம்பரத்தில் தோன்றியுள்ளார்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடித்திருக்கும் தி வாரியர் திரைப்படத்தில் நடிகர் ஆதி மிரட்டலான வில்லனாக நடித்துள்ளார். கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள தி வாரியர் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
ஸ்ரீனிவாச சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தி வாரியர் திரைப்படம் வருகிற ஜூலை 14ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் லிங்குசாமியின் தி வாரியர் படத்திற்காக ஒரு பாடலை நடிகர் சிலம்பரசன் பாடியுள்ளார் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.