‘அன்னை தமிழுக்கு அழுகு சேர்த்தவர்’ நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என சிவாஜியின் 21 ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஓட்டி சீமான் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
”வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலை போராட்ட வீரர்களையும் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திய கலை உலக சிற்பி. தமிழ்ப் பேரியக்கத்தின் பெருமை மிகு கலை அடையாளம்” என நடிகர் திலகம் சிவாஜியின் 21 வது நினைவு தினத்தை முன்னிட்டு சீமான் உருக்கமாக கூறியுள்ளார்.
திரை நடத்திரங்களிலேயே வித்தியாசமான துருவ நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் சிவாஜி கணேசன்.. நடிகர் திலகம், நடிப்புச் சக்கரவர்த்தி, சிம்ம குரலோன் என மக்களால் அழைக்கப்பட்ட சிவாஜி, சர்வதேச அளவில் சிறந்த நடிகர் விருதை வென்ற முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மற்றும் திரைப்பட துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

50 ஆண்டு கால திரைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் கிட்டதட்ட 300 படங்களில் நடித்தவர் சிவாஜி. இதில் தமிழில் மட்டும் 250 க்கும் திகமான படங்களில் நடித்தவர்.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய நடிகரும் நம் சிவாஜி கணேசன்தான்.. கடந்த 2001ம் ஆண்டு இதே நாள், தன்னுடைய 72வது வயதில் உயிரிழந்தார்.. அவரது நினைவை, ரசிகர்களும், தலைவர்களும், பொதுமக்களும் இன்று சிறப்பித்து வருகின்றனர்.. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சிவாஜி கணேசனுக்கு புகழாரம் சூட்டி உள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
தன்னிகரற்ற கலைத்திறனால் நாட்டுமக்களின்உள்ளத்திலும் இல்லத்திலும் ஒருசேர நிறைந்தவர்!
சிம்மக்குரலால் செந்தமிழ்ப்பேசிஅன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்தவர்!
வணங்கும் கடவுளையும், வரலாற்று நாயகர்களையும், விடுதலைப் போராட்ட வீரர்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்தியகலை உலகச் சிற்பி! pic.twitter.com/6Enu084AvA— சீமான் (@SeemanOfficial) July 21, 2022