‘காசி தமிழ் சங்கமம்’ நிகழ்ச்சியில் சிவாஜி, விஜய்சேதுபதி படங்கள் ஓளிப்பரப்பட இருக்கின்றது. தமிழுக்கும் காசி நகருக்கும் உள்ள பழங்கால நெருக்கத்தை போற்றும் வகையில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு நடத்தி வருகின்றது.
காசிக்கும் தமிழுகத்திற்கும் உள்ள நெருக்கத்தை பறைசாற்றும் வகையில் காசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி சிறப்பான முறையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து தமிழ் சிறப்பு பட்டிமன்றங்கள், தமிழ் இலக்கிய கருத்தரங்குகள், திருக்குறள் போட்டிகள், பாரதியார் பற்றிய கட்டுரைகள் என அனைத்தும் நடைபெற்று வருகின்றது.
இதன் ஓரு பகுதியாக பல்வேறு வகையான கருத்தரங்கு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் தமிழில் நடிப்பு திலகமாக விளங்கிய சிவாஜி கணேசனின் திருவிளையாடல் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் ஓளிப்பரப்பபடுவதாக இருக்கின்றது. அதை போல விஜய் சேதுபதியின் நடிப்பில் சீனுராமசாமி உருவாக்கத்தில் வெளியாகி விருதுகளை குவித்த மாமனிதன் திரைப்படமும் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்படங்கள் டிசம்பர் 13-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சிவாஜியின் திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படமும், டிசம்பர் 14-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சிவாஜியின் கர்ணன் திரைப்படமும், டிசம்பர் 12-ம் தேதி மதியம் 2 மணிக்கு விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படமும் திரையிடப்படுகிறது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.