நடிகர் சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ படத்தில் கார்ட்டூனிஸ்டாக நடிக்கிறார். இப்படத்தை மடோனா அஸ்வின் இயக்கி வருகிறார்.
சிவகார்த்திகேயன் முதலில் தனியார் தொலைக்காட்சியில் மிமிக்ரி ஆர்டிஸ்டாக தடம் பதித்தவர். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்த சிவாவிற்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து முயற்சி செய்து தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருந்து விடலாம் என்று நினைத்தார். ஆனால் அவருக்கு சினிமா துறையில் முன்னணி நடிகராக இருக்கும் வாய்ப்பையே தந்தது அவரது ரசிகர் பட்டாளம்.
நல்ல நல்ல படங்களில் நடித்து அனைவரது மதிப்பையும் பெற்று வந்த நிலையில் இறுதியாக நடித்த ப்ரின்ஸ் திரைப்படம் சறுக்கலில் விட்டுள்ளது. ப்ரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறாத நிலையில் பெரிய அளவில் சிவகார்த்திகேயன் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், மடோனா அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இதில் அவர் பத்திரிகையாளராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ஆக்ஷன் காட்சிகள் ஈ.சி.ஆர் பகுதியில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது தெரியாமல் இருந்தது.
தற்போது அவர் கார்ட்டூனிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதிதி பத்திரிகையாளராக வேலை பார்க்கும் அலுவலகத்தில் கார்ட்டூனிஸ்டாக சேர்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். வாழ்வில் நடைபெறும் உண்மை சம்பவங்கள் அடிப்படையில் அவர் கார்ட்டூன் வரைவார் என்றும் சொல்லப்படுகிறது. நடிகர் மிஷ்கின் படத்தில் வில்லனாக நடிக்கிறார். யானிக் பென் படத்தின் சண்டைப் பயிற்சியாளர். ’மாவீரன்’ திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சுவாரசிய தகவல்கள்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.