விடுதலை படத்தை தொடர்ந்து காமெடி வேடங்களில் நடிப்பேன் – நடிகர் சூரி

0
26

சூரி: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘விடுதலை’. இது 2 பாகங்களாக உருவாகியுள்ளது.  இதில் நடித்தது குறித்து சூரி கூறியதாவது,

இதுவரை எத்தனையோ முறை காமெடியனாக மேடை ஏறியுள்ளேன். இப்போது முதல்முறையாக கதையின் நாயகனாக மேடை ஏறும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இளையராஜா இசையில் உருவான பாடலில் நான் ஒரு உருவமாக தோன்றுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். ஹீரோக்களுக்கு இணையாக அதிகளவு ரசிகர்களை கொண்ட இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒருவர். அவரது படத்தில் சில காட்சிகளிலாவது நடிக்க மாட்டாேமா என்று பல நேரங்களில் ஏங்கியதுண்டு. அவரை நேரில் சந்தித்தபோது ‘விடுதலை’ கதையைச் சொன்னார். ஒவ்வொரு கேரக்டரையும் பற்றி அவர் சொல்லும்போது எல்லா கேரக்டருக்கும் நடிகர்களை ஒப்பந்தம் செய்து விட்டீர்கள். லீட் ரோலில் யார் நடிக்கிறார் என்று கேட்டேன். அதில் நான் நடிப்பதைப் பற்றி சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

actor soori said continuously acting in comedy roles after viduthalai movie

அப்போது நான் அடைந்த சந்தோஷத்தில் எழுந்து நின்றிருந்தால் அந்த வானத்தையே முட்டியிருப்பேன். பிறகு ‘வடசென்னை’, ‘அசுரன்’ ஆகிய படங்களை இயக்கிய வெற்றிமாறன் என் நம்பிக்கையை வீணடிக்காமல் ‘விடுதலை’ வாய்ப்பை வழங்கினார். எனக்குள் இவ்வளவு வருடங்களாக மறைந்திருந்த வேறாெரு நடிகரை அவர் தட்டி எழுப்பியுள்ளார். தொடர்ந்து நான் கதாநாயகனாக மட்டும் நடிப்பேன் என்று நினைக்காதீர்கள். காமெடிதான் எனக்கு சோறு போடுகிறது. எனவே தொடர்ந்து காமெடி வேடங்களிலும் நடிப்பேன் என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here