ஜெயிலர் திரைப்படத்தில் இன்னொரு வில்லனாக இணைந்த தெலுங்கு நடிகர்

0
3

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் வேலையில்இப்படத்தில் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் இணைந்தனர். தொடர்ந்து இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் சுனில் இணைந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழகத்தின் மிக முக்கிய நடிகராக 40 ஆண்டுகாலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பெற்று இருக்கின்றார். இவர் இறுதியாக நடித்த அண்ணாத் திரைப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும் எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு அவருக்கு பெரும் வரவேற்பு உடைய படம் அவருக்கு அமையவில்லை.

இந்நிலையில், நடிகர் விஜயின் பீஸ்ட் திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தீலிப் குமார் இப்படத்தை இயக்கி வருகிறார். ரஜினிக்கும் நெல்சனுக்கும் இப்படம் மிக முக்கிய படமாக காணப்படுகிறது. இருவரும் இப்படத்தின் மூலம் வெற்றியை பெற்று ரசிகர்களுக்கு தரமான படத்தை நல்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் திரைப்படத்தில் இன்னொரு வில்லனாக இணைந்த தெலுங்கு நடிகர்

இப்படத்தில் படையப்பா படத்திற்கு பிறகு நடிகை ரம்யா கிருஷ்ணன் இப்படத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் யோகிபாபுவும் நடிக்கிறார். மேலும்,கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவராஜ் குமார் இவரும் இந்த படத்தில் இணைந்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சன்பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.

தொடர்ந்து, கெஸ்ட் ரோல் காட்சிகளில் மலையாள முன்னணி நடிகர் மோகன்லாலும் நடிக்க இருப்பதாக கூறப்படும் இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் சுனில் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே வில்லனாக சிவராஜ் குமார் நடிக்கும் நிலையில் இன்னொரு வில்லன் கதாபாத்திரத்தில் இவர் இணைந்துள்ளது இப்படத்தின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்து வருகிறது.

மூன்று மொழி முன்னணி நடிகர்களும் இப்படத்தில் இணைந்திருப்பது சிறப்பாக உள்ளது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் கதை வெளியாகி உள்ளது. ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினி ஜெயில் வார்டனாக இருக்கிறார். அதே ஜெயிலில் இருந்து ரவுடிகள் தப்பிக்க நினைக்கின்றனர். அவர்களை தடுத்து நிறுத்தும் ரஜினிக்கும் வில்லன்களுக்கும் இடையே ஏற்படும் கதையே என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: ரசிகர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படணும்-லோகேஷ் கனகராஜ்

இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வரவில்லை. விரைவில் இப்படத்தின் பணிகள் முடிக்கப்பட்டு தீபாளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here