நடிகர் சூர்யா 42 வது படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இதில் மாறுப்பட்ட வேடத்தில் நடித்துள்ள சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகையான திஷா பதானி நடிக்கிறார்.
இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஞானவேல் ராஜா தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். வரலாற்று முக்கியம் வாய்ந்த கதைத் தளமாக இருக்கும் இப்படத்தின் படக்காட்சிகள் மிகுந்த எதிர்பார்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தி வருகிறது. தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் இப்படம் தயாராகி வருகிறது.
இப்படத்தில் கோவை சரளா, ஆன்ந்தராஜ், யோகிபாபு போன்ற முக்கிய கதாப்பாத்திரங்கள் நடித்துள்ளன. சமீபத்தில் மோஷன் பிக்சர் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் கெரியரில் பேசப்படும் படங்கள் நிறைய உள்ளது அது போன்று இதுவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

இப்படத்தின் புதிய புதிய அப்டேட்கள் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள சில காட்சிகள் தொடர்ந்து சென்னை நகரில் நடந்து வருகிறது. இந்த படக்காட்சிக்காக நேற்று பாலிவுட் முன்னணி நடிகையான திஷா பதானி விமானம் மூலம் வந்துள்ளார்.
இப்படத்தின் கதைத்தளத்திற்காக இலங்கை நாட்டிலும் படப்பிடிப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஐந்து கேர்க்டர்கள் வழங்கப்ட்டிருப்பதாகவும் தெரிய வருகிறது. உலக நாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் இறுதியாக வரும் 3 நிமிட காட்சியில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த சூர்யா தற்போது இப்படத்தில் நடிப்பதன் மூலம் மிக பெரும் எதிர்பார்பை தந்துள்ளார்.
இந்த இரண்டாம் கட்ட படபிடிப்புக்கு பிறகு 30 நாட்கள் ஓய்வு பெற உள்ளார். பின்னர் மீண்டும் படபிடிப்பு பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாடிவாசல் போன்ற படங்களில் நடிப்பதற்காக விரைவில் இப்படத்தில் நடித்து முடித்து விட வேண்டும் என்ற ஆவல் சூர்யாவிற்கு எழுந்துள்ளது. எனவே விரைவில் இப்படம் தியேட்டர்களை அலங்கரிக்க காத்திருக்கிறது.
இதையும் படியுங்கள்: இந்தியன் 2 படப்பிடிப்பு புகைப்படத்தை பதிவிட்ட நடிகர் கமலஹாசன்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.