வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல் ரசிகர்கள் அதிர்ச்சி

0
12

வணங்கான் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பாலா உருவாக்கி வருகின்றார். இந்த தருணத்தில் நடிகர் சூர்யா இந்த படத்திலிருந்து விலகியதை இயக்குனர் பாலா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவிற்கு மிகுந்த வெற்றி படமாக அமைந்து அவரை முழு நடிகனாக ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளப்படங்களில் நந்தா மற்றும் பிதாமகன் இப்படங்களின் மூலம் சூர்யா ரசிகர்களிடையே பெரும் மதிப்பையும் ஆராவாரத்தையும் பெற்றவராக திகழ்ந்து வந்தார். இந்த நிலையில் அடுத்ததாக இயக்குனர் பாலாவின் படத்தில் சூர்யா வணங்கான் படத்தின் மூலம் மீண்டும் இணைந்த செய்தியை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் பாலா அறிக்கை ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில், “வணக்கம், என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

வணங்கான் படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகல் ரசிகர்கள் அதிர்ச்சி

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு, ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக் இருக்கிறது கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது. எனினும் தொடர்ந்து வணங்கான் திரைப்படம் பணிகள் தொடர்ந்து நடைபெறும்”.

இதையும் படியுங்கள்: பாபா ரீரிலிஸ் படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது

நந்தாவில் நான் பார்த்த சூர்யா, பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு தருணத்தில் நாங்கள் இணைந்து ஓரு நல்ல படத்தை உங்களுக்கு தருவோம் எனவும் தெரிவித்தார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here