இயக்குனர் சங்கர் இயக்கும் வேள்பாரி படத்தில் நடிகர் சூர்யா வேள் பாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலை தழுவி இயக்குனர் சங்கர் திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாகவும் அதில் வேள்பாரியாக நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விருமன் படவிழாவில் சூர்யா பேசுகையில் சு.வெங்கடேசனுடன் இணைந்து ஓரு படத்தில் நடித்து வருவதாக கூறியிருந்தார்.
இந்திய சினிமாவிலேயே தற்போது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மறைந்த பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் நடிகர்கள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் வரும் செப்.30ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்களில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா கடந்த செப்.6ஆம் தேதி சென்னையில் மிக விமர்சையாக நடைபெற்றது. ரஜினி, கமல் உள்ளிட்டோர் முதல் பல்வேறு திரைப்பட கலைஞர்கள் அதில் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து, இணையத்தில் வெளியான டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பென்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் உள்ள வரலாற்று புனைவு கதைகளையும் திரைப்படமாக்க பலரும் முனைப்பு காட்டி வருகின்றனர். அதை கருத்தில்கொண்டு, வேள்பாரி நாவலை திரைப்படமாகவோ அல்லது வெப்-சீரிஸாகவோ ஷங்கர் படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், வேள்பாரியாக நடிகர் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன் தெலுங்கு இயக்குனர் ராஜமௌலியின் பாகுபலி வரலாற்று படமாக இருந்தாலும் உலகமெங்கும் பெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழிலும் வரலாற்று புனைவு கதைகளை எடுக்க திட்டமிட்டு நெடுகால கனவான பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுக்கப்பட்டு தற்போது திரைக்கவுள்ளது.
அதனை தொடர்ந்து வேள்பாரி திரைப்படமும் படப்பிடிப்புகள் சிறப்பான முறையில் எடுக்கப்பட்டு திரைக்கு வரும் என சினிமா ஆர்வலர்கள் கருதுகின்றனர்.