தளபதி 66 படத்தின் பெயர் மற்றும் படத்தின் முதல் புகைப்படம் வெளியானது

0
6

தளபதி 66 படத்தின் பெயர் மற்றும் படத்தின் முதல் புகைப்படம் வெளியானது. இன்று தளபதி விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று மாலை தளபதி நடிக்கும் 66 வது படத்தின் பெயர் மற்றும் படத்தின் முதல் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரப்பரப்பாக பல லைக்குகளை அள்ளிக் கொண்டுள்ளது.

தமிழ் திரைத்துறையின் மிகவும் தவிர்க்க முடியாத நபராக இருப்பவர். அமைதி, தன்னடக்கம், மென்மை, அன்பான பேச்சு என பல நல்ல குணங்களை கொண்டு ரசிகர்களின் பெரும் ஆதரைவையும் இளைஞர்கள் கொண்டாடும் தளபதியாகவும் உள்ளவர் நடிகர் விஜய்.

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தைப் பெற்றாலும் தமிழகத்தில் பெரும்பாலன இடங்களில் நல்ல வசூல் படைத்துள்ளது. இதைதொடர்ந்து ஓரு மாசான நல்ல படத்தை தர வேண்டும் என்ற எண்ணம் விஜய்க்கு உள்ளது. அதனால் தளபதி 66 வது படத்தில் நல்ல கதை அம்சம் உள்ளதாக எதிர்பார்த்தார் நடிகர் விஜய்.

தளபதி 66 படத்தின் பெயர் மற்றும் படத்தின் முதல் புகைப்படம் வெளியானது

தெலுங்கு இயக்குநரான வம்சி கதையை கூறவே நன்றாக உள்ளது அதை நாம் செய்யலாம் என ஓப்புக் கொண்டார் நடிகர் விஜய். வம்சி தமிழில் கார்த்திக்கை வைத்து தோழா என்ற படமும் மகேஷ் பாபுவை வைத்து மஹரிஷி போன்ற படங்களை கொடுத்துள்ளார்.

தளபதி 66 படத்தில் ராஷிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ராதிகா, யோகிபாபு, பிரகாஷ்ராஜ் என பலர் இணைந்து நடிக்கின்றனர். வம்சி இயக்கத்தில் தமண் இசையமைக்கிறார். பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத்தின் பெயர் வாரிசு என்பதையும் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அத்துடன் தி பாஸ் ரிட்டன்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் அன்று ரீலிஸ் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைய தளபதி நற்பணி இயக்கம் சார்பாக பல மாதங்களாக விலையில்லா விருந்தகங்கள் அனைத்து ஊர்களிலும் தொடங்கி தொடர்ந்து நடைப்பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here