சென்னை பனையூரில் நிர்வாகிகளை சந்தித்த நடிகர் விஜய்

0
5

சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சந்தித்தார். கடந்த மாதம் நடந்த சந்திப்பில் ஓவ்வொரு மாதமும் இதே போன்ற சந்திப்பு நடைபெறும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் பொங்கலுக்கு திரைக்கு வரக் காத்திருக்கும் திரைப்படம் வாரிசு. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் வருகின்ற பொங்கல் தினத்தை விஜய் படத்துடன் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து இப்படத்தில் வரும் ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் வெளியாகி 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. சமீபத்தில் தளபதி தீ தளபதி பாடலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை பனையூரில் நிர்வாகிகளை சந்தித்த நடிகர் விஜய்

இந்நிலையில், கடந்த 5ம் தேதி அடுத்த படத்திற்கான பூஜையில் கலந்து கொண்ட விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜிடன் இணைந்து உள்ளார். ஏற்கனவே இவ்விருவரும் இணைந்து வெளியான படம் மாஸ்டர் இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யை சந்திக்க வரும் ரசிகர்கள் எண்ணிக்கை புஸ்ஸி ஆனந்த் சொல்லும் அளவில்தான் இருக்க வேண்டும் என சில ரசிகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். புஸ்ஸி ஆனந்த் மற்றும் அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு மட்டுமே நடிகர் விஜய்யை சந்திக்க பாஸ்கள் வழங்கப்படுவதாகவும் மன்ற நிர்வாகிகள் என்ற பெயரில் குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்படுவதால் உண்மையான ரசிகர்கள் பாதிக்கப்படுவதாகவும் இதனை நடிகர் விஜய் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இது ஒரு புறம் இருக்க நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாகவும் நடிகர் விஜய் ரசிகர்களுடன் ஆலோசனை மேற்கொள்வதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் சென்னை மதுரை கோவை உள்ளிட்ட சில பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் நேரடியாக விஜய்யின் ஆதரவுடன் போட்டியிடலாம் எனவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதனிடையே இன்று நடந்த மன்ற நிர்வாகிகளில் ஓருவரான மாற்றுத்திறனாளியை இரு கைகளால் தூக்கி புகைப்படம் எடுத்துள்ள விஜயை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here