ஹிந்தி நடிகர் ஷாருக்கானுடன் விஜய் சந்திப்பு

0
6

விஜய்: இயக்குனர் அட்லீ தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கியவர். இவை அனைத்தும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படங்கள் தான். நயன்தாரா ஒரு பிரேக்கிற்கு பிறகு தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்த படம் ராஜா ராணி. இதில் ஆர்யா ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். இது தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான காதல் திரைப்படமாக அமைந்தது. இது நயன்தாராவிற்கு ஒரு திருப்புமுனை படமாகவே அமைந்தது. அதன் பிறகு அட்லீ் அவர்கள் நடிகர் விஜய்யுடன் இணைந்து இயக்கிய படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றது.

atleeyin jawan

அட்லீ அடுத்ததாக ஷாருக்கான் நடித்து தயாரிக்கும் ஜவான் படத்தை இயக்குகிறார். இதில் தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, சான்யா மல்ஹோத்ரா, யோகி பாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பை சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் நடத்தி வருகிறார். இதில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் தனது காட்சிகளை முடித்துக் கொண்டு தீபிகா மும்பை சென்று விட்டார்.ஷாருக்கான் சென்னையில் தான் படப்பிடிப்பில் இருக்கிறார்.

நேற்று  முன்தினம் அட்லீக்கு பிறந்தநாள் வந்தது. இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காகவும், ஷாருக்கானை சந்திப்பதற்காகவும் படப்பிடிப்பு தளத்துக்கு விஜய் அவர்கள் வந்திருந்தார். அப்போது விஜயை கட்டித் தழுவி ஷாருக்கான் வரவேற்றார். ஷாருக்கானுடன் இணைந்து விஜய் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பிறகு அட்லீயுடன் சேர்ந்தும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் நடித்து வரும் வாரிசு படம் குறித்து ஷாருக்கான் கேட்டறிந்தார். படத்தின் வேலைகள் எந்த அளவில் இருக்கின்றன என்பதையும் கேட்டார். இந்நிலையில் ஜவான் படத்தில் விஜய் ஒரு காட்சியில் கேமியோ ரோல் பண்ண இருப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதில் விஜய் நடிப்பதற்கான காட்சிகள் எதுவும் கிடையாது என்று படக்குழு மறுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here