வம்சி இயக்கும் வாரிசு படத்தில் ஆப் டிசைனர் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார்.
தளபதி 66 என்ற விஜய்யின் படத்தை இயக்கும் இயக்குனர் வம்சி விஜய் ராஜேந்திரன் கதாபாத்திரத்தில் ஆப் அப்ளிகேஷ்ன டிசைனராக (APP APPLICATION DISINER) நடிக்கிறார் என்ற பிரத்தியேக தகவல் வந்துள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகிறது.
பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து வம்சி இயக்கம் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

தற்போதைய சூழலில் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நான்காம் கட்டப்பட பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பை ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து சென்னையில் தொடங்குகின்றனர்.
வாரிசு திரைப்படத்தில் விஜய் தவிர ராஸ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவை வாரிசு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெறுகிறது என தகவல் வெளியாகி உள்ளது.
விஜயுடன் எஸ்.ஜே.சூரியா நடிப்பது முதல் முறையல்ல நான்காவது படமாக அமையும் விஜய்யை வைத்து எஸ்.ஜே.சூர்யா முதன்முதலாக இயக்கிய ‘குஷி’ படம் நல்ல வரவேற்பை பெற்றது, அதனை தொடர்ந்து அவர் விஜய் நடித்த ‘நண்பன்’ மற்றும் ‘மெர்சல்’ போன்ற படங்களில் நடித்திருந்தார். ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன், எஸ்.ஜே.சூர்யா இணையயப்போவதாக வெளிவந்த செய்தி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, மேலும் படம் குறித்த பல்வேறு அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.