தமிழ் திரையுலகில் செல்லமாக சீயான் என அழைக்கப்படும் நடிகர் விக்ரம் லேசான நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என தவறான தகவல்கள் பரவுகிறது.
முதன் முதலில் டப்பிங் கலைஞராக இருந்து இன்று திரைத்துறையின் முன்னனி நட்சத்திரமாக மிளிர்பவர் நடிகர் விக்ரம் அவரது முன்னேற்றத்தை அவர் திறமைக்கு கிடைத்த பரிசாக அவருடைய ரசிகர்கள் பார்க்கின்றனர்.
நடிகர் விக்ரம் அவருடைய படங்களில் வரும் கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கிடுபவர் தன் உடல் எடையை ஏற்றியும் இறக்கியும் கதைக்காக எவ்விதத்திலும் மாற்றுபவர். இவருடைய படங்கள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்த படங்களாகவே இருக்கும் பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார்.

சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் பாகம் 1 ல் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் வந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். இன்று பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு ஓளிபரப்பாகிறது. இதை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.
இந்நிலையில், நடிகர் விக்ரமிற்கு லேசான நெஞ்சுவலி காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நலமாக உள்ளார் நாளை டிஸ்ஜார்ஜ் ஆவார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
விக்ரமின் மேலாளரான சூரிய நாராயணன் கூறுகையில், லேசான நெஞ்சுவலி தான் சிலர் சமூகவலைதளங்களில் மாரடைப்பு என கூறி வதந்திகளை தெரிவிக்கின்றனர். இது முற்றிலும் தவறு அவர் நலமுடன் இருக்கிறார். மேலும், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கூறுகையில், இது போன்ற தருணங்களில் ரசிகர்கள் மற்றும் வதந்தி பரப்புபவர்களும் எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலாக இருக்க வேண்டும். மாறாக, வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்தார்.