திரை பயணம் 32 ஆண்டுகள் நிறைவை அடுத்து ரசிகர்களுக்கு விக்ரம் நன்றி

0
14

திரை பயணம் 32 ஆண்டுகள் நிறைவை அடுத்து ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம் நன்றி தெரிவித்து டிவிட் செய்துள்ளார்.

”இத்தனை வருடங்கள், அத்தனை கனவுகள், முயற்சி திருவினையாக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. திரைக்கு வந்து 32 வருடங்கள் என்னை ஆதரித்ததற்கு ரசிகர்களுக்கு நன்றி” என கூறி சீயான் விக்ரம் டிவிட்.

நடிகர் விக்ரம் காதல் கண்மணி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காமல் அவதியுற்றார். அப்போது டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பல முன்னணி கதாநாயகர்களுக்கு குரல் கொடுத்திருக்கின்றார். இவரது திரை பயணம் எளிதானதாக இருந்தது இல்லை என்றும் அவர் கூறியிருக்கின்றார். பல போராட்டங்களுக்கு இடையே பல முயற்சிகளுக்கு பின் வெற்றிகளை சந்தித்தவர்.

திரை பயணம் 32 ஆண்டுகள் நிறைவை அடுத்து ரசிகர்களுக்கு விக்ரம் நன்றி

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் உருவான திரைப்படம் சேது இந்த படத்தின் மூலம் தான் விக்ரம் என்ற நடிகரை இந்த திரை உலகம் கொண்டாடி தீர்த்தது. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் இவரை சீயான் என்று இன்றளவும் அழைக்கும் நபராக இருந்து வருகின்றார். சேது படத்தின் வெற்றிக்கு பின் அவர் நடித்து வந்த பல படங்கள் மாஸாக இருந்தது.

அதனை ரசிகர்கள் வரவேற்று நடிகர் விக்ரமை கொண்டாடினர். தொடர்ந்து பல வெற்றி படங்களை நடித்து கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வந்துள்ளார். இவர் தன் படங்களுக்காக உலக நாயனை போல மெனக்கெட்டு பலரும் வியந்து பார்க்கும் வேடங்களில் நடித்து வந்தார்.

தில், தெய்வ திருமகள், பிதாமகன்,சாமி, கந்தசாமி என பல வெற்றி படங்களையும் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ராவணன் படத்திலும் தற்போது வெளியாகி சூப்பர் ஹூட் ஆகி உலக அளவில் சாதனை படைத்து வரும் பொன்னியின் செல்வன் படத்திலும் தன் நடிப்பு திறமையை ஆதித்திய கரிகால சோழனாக இடம் பெற்று ரசிகர்களின் கைத்தட்டல்களை பெற்று வருகின்றவர் விக்ரம்.

தற்போது, அவர் திரை பயத்திற்கு அடி எடுத்து வைத்து 32 ஆண்டுகள் ஆனதை அடுத்து அவரது ரசிகர்கள் அவரை வாழ்த்து வருகின்றனர். அவரும் ரசிகர்களுக்கு நன்றி என டிவிட் செய்து வைரலாகி வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here