மறைந்த வைரவனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்-விஷ்ணு விஷால்

0
9

மறைந்த வைரவனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிகுழு படத்தை இயக்கியவர் சுசீந்திரன் முதல் படமான இவரின் படத்தில் கதாநாயகனாக விஷ்ணுவிஷால் நடித்திருந்தார். இவர்களுடன் அப்புக்குட்டி, சூரி, கிஷோர், சரண்யா மோகன், நிதிஷ் வீரா, விஜய் சேதுபதி, வைரவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில், வெண்ணிலா கபடி குழு, குள்ளநரி கூட்டம், நான் மகான் அல்ல உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஹரி வைரவன் இவருக்கு நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். அவருக்கு ஏற்பட்டுள்ள உடல் பிரச்சனைகளால் சிறுநீரிக இழப்பு ஏற்பட்டு நேற்று முன்தினம் இறந்தார்.

மறைந்த வைரவனின் குழந்தைகளின் கல்வி செலவை ஏற்கிறேன்-விஷ்ணு விஷால்

இதனால் திரையுலகத்தினர் ஆழ்ந்த இறங்கலை தெரிவித்து வந்தனர். இதனையடுத்து இவரது குடும்பத்திற்கு உதவி நல்கிட வேண்டும் என பலதரப்புகளிடமும் சமூகவளைதளங்களில் பகிரப்பட்டது.

இந்நிலையில், நடிகர் விஷ்ணு விஷால், மறைந்த நடிகர் ஹரி வைரவனின் குழந்தையின் கல்விச் செலவை தான் முழுவதுமாக ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஹரி வைரவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். கடைசி ஆறு மாதங்களாக அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். இது வெளிய யாருக்கும் தெரியாது. என்னால என்ன உதவி செய்ய முடியுமோ அதை கடந்த ஆறு மாதங்களாக நான் செய்தேன்.

அவரது மனைவியிடமும் பேசினேன். என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கிறேன். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுக்கொள்கிறேன் என அவர்களிடம் சொன்னேன். வைரவன் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் உள்ளது. என்ன எப்பவும் மாப்ளனு தான் கூப்பிடுவாரு. அந்த மெசேஜில் தேங்க் யூ மாப்ள, நீ எனக்கு உதவி செய்றது ரொம்ப சந்தோஷம் என சொல்லி இருந்தார்” என்று விஷ்ணு விஷால் கூறினார்.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here