BB வீட்டில் தற்போது ஃப்ரிஸ் ரிலிஸ் மற்றும் லூப் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்கின் போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நபர்களின் குடும்பத்தார் நண்பர்கள் சந்திப்பது வழக்கம் இதில் சர்ப்ரைசாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொண்டார்.
விஜய்டிவியில் ஓளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை முடித்து 6 வது சீசன் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை இந்த முறை 24 நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டார் லைவ்வில் காணலாம். விஜய் டிவியில் தினமும் 1 மணிநேர காட்சி ஓளிப்பரப்படும் அதனையும் காணலாம்.
இந்த வார டாஸ்கில் ஃப்ரிஸ் ரிலிஸ் டாஸ்கின் போது கடும்ப உறுப்பினர்கள் வருவது ஓவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதும் நடைபெறும் தற்போது இந்த சீசனுக்கான டாஸ்கில் குடும்ப உறுப்பினர்கள் வந்து பிக்பாஸ் வீட்டை கலப்பு செய்து வருகின்றனர். முதலாவதாக மைனா நந்தினியின் மகனும் கணவனும் வந்தனர்.

பின்னர், அமுதவாணனின் மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகளும் வந்தனர். தொடர்ந்து ஷிவினின் அம்மா மற்றும் சகோதரி வரமுடியாததால் அவரது தோழி மற்றும் நண்பர் ஓருவர் வந்திருந்தார். இவர்களை கண்டதும் ஷிவின் அம்மா வரவில்லை என்று கூறி அழுதார். பின்னர், வழக்கம் போல பேச ஆரம்பித்தனர். நேரம் ஆனப்பிறகு வெளியேறினர்.
தொடர்ந்து ரச்சிதாவின் அம்மா மற்றும் நண்பர் வந்திருந்தனர். அவரது அம்மாவை தழுவி கண்ணீர் மல்கிய ரச்சிதாவை அம்மா தேற்றினார். நீ நன்றாக விளையாடுகிறாய் இன்னும் நன்றாக விளையாடு என கூறி சென்றார். அவர்களை தொடர்ந்து மணிகண்டாவின் மனைவி, மகன், அம்மா என அனைவரும் வந்தனர்.
மணிகண்டாவின் சகோதரி வரவில்லையே என அனைவரும் பார்த்திருக்கும் போது பிக்பாஸ் கன்பூயுஷன் அறையில் அவரை அமர்த்தி ஆச்சரியப்படுத்தினார். அனைவரிடமும் சுவாரசியமாக பேசிய மணிகண்டா குடும்பத்தார் நேரம் ஆனபோது விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படப்பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வெளியேற்றினர்.
மணிகண்டாவின் சகோதரரை காண வரவில்லை அவர் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கின்றார் என அனைவரும் நினைக்க பிக்பாஸ் அவரை சர்ப்ரைசாக அறிமுகப்படுத்தினார். இதனால் பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் குதுகலமாக இருந்தது.
இதையும் படியுங்கள்: BB வீட்டில் இந்த வாரம் ஃப்ரிஸ் ரிலிஸ் டாஸ்க் நடந்து வருகிறது
இந்த நிகழ்ச்சி 81 நாட்களை கடந்து சென்று கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் டைட்டில் வின்னர் யாராக இருக்கும் என அனைவரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.