நடிகை ஹன்சிகாவின் திருமணம் அரண்மனை ஓன்றில் நடைபெறுகிறது

0
0

நடிகை ஹன்சிகாவின் திருமணம் ஜெய்பூரில் உள்ள மிக பெரும் அரண்மனை ஓன்றில் இந்த வருட இறுதியில் நடைபெற இருப்பதாக தகவல்.

நடிகை ஹன்சிகா தமிழ், தெலுங்கு, இந்தி, துளு, ஆங்கிலம் என பல மொழிகளை பேசக் கூடியவர். இவரின் எண்ணற்ற படங்கள் வெற்றி பெற்றுள்ளது. இவர் தற்போது 50 படங்கள் வரை நடித்துள்ளார். இந்நிலையில், ஹன்சிகாவின் திருமண ஏற்பாடுகள் மிக பிரம்மாண்ட முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகின்றது.

ஹன்சிகா மும்பையில் பிறந்தவர். தந்தை பீரதீப் மோத்வானி தாய் மோனா தோல் சிகிச்சை நிபுணர் இவர்களுக்கு பிறந்தவர் தான் ஹன்சிகா தமிழ் சினிமா மட்டும் அல்லாது தான் பேசும் மொழி அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை ஹன்சிகாவின் திருமணம் அரண்மனை ஓன்றில் நடைபெறுகிறது

ஷாகா லகா பூம் பூம், கியுங்கி சாஸ் பி கபி பஹு தி மற்றும் சன் பாரி டிவி சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஹன்சிகா மோத்வானே தெலுங்கு படமான தேசமுதுரு மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் அல்லு அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: நடிகர் மம்மூட்டியுடன் இணையும் ஜோதிகா புதிய திரைப்படத்தின் அறிவிப்பு

பின்னர் சில இந்தி படங்களிலும் நடித்தார். 2008ல் கன்னடத்திலும் கதாநாயகியாக நடித்தார். ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கில் தற்போது அதிக அளவில் நடித்து வருகிறார். ஹிருத்திக் ரோஷனின் வெற்றிப் படமான கோயி மில் கயாவிலும் ஹன்சிகா நடித்துள்ளார். ஹன்சிகாவின் அடுத்த படம் ரவுடி பேபி.

கடந்த ஜூலை மாதம் தான் நடித்த மஹா படம் தனக்கு 50 வது படம் என்றும் தான் 50 படங்கள் நடிப்பதற்கு உறுதுணையாக இருந்தது ரசிகர்கள் தான் என்றும் நெகிழ்ச்சியாக கூறியிருந்தார். தனது அன்பான ரசிகர்கள் இல்லாமல் என் குடும்பம் முழுமை பெறாது என்றும் கூறியிந்தார்.

இந்த நிலையில், ஹன்சிகா மோத்வானி திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெறும் என்றும் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான அரண்மனை ஒன்றில் திருமணம் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் மணமகன் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஜெய்ப்பூர் அரண்மனையில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது தொடர்பாக நடிகையிடமிருந்தோ அல்லது அவரது உறவினர்களிடமிருந்தோ உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.

இது போன்ற தகவல்களையும் வேறு தகவல்களையும் தெரிந்து கொள்ள தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here