லட்சுமி மேனன்: தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் நடித்தவர் ஆதி. அவர் நடித்த ‘மரகத நாணயம்’ படத்தில் நிக்கி கல்ராணியுடன் சேர்ந்து நடிக்கும் போது அவருடன் காதல் மலர்ந்தது. பின் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து காெண்டனர். லட்சுமி மேனன் சில வருடங்களுக்கு முன்பு விக்ரம் பிரபுவுடன் நடித்த ‘புலிக்குத்தி பாண்டி’ படத்திற்கு பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு ஆதிக்கு ஜோடியாக ‘சப்தம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
‘ஈரம்’ படத்துக்கு பிறகு மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் ஆதி ஹீரோவாக நடிக்கும் படம் ‘சப்தம்’. இதில் ஆதி ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார். தமிழில் சில வருட இடைவெளிக்கு பிறகு அவர் நடிக்கும் இப்படத்தை ஆல்பா பிரேம்ஸ் சார்பில் அறிவழகன், 7 ஜி பிலிம்ஸ் சார்பில் சிவா இணைந்து தயாரிக்கின்றனர். ஹாரர் த்ரில்லர் கதை கொண்ட இப்படத்தின் 2ம் கட்ட ஷூட்டிங்கில் லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படுகின்றன.
‘ஈரம்’ படத்துக்கு பிறகு மீண்டும் ஆதி, அறிவழகன் கூட்டணியுடன் இசையமைப்பாளர் தமன் இணைந்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியீடு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.