மாளவிகா அவினாஷ்: பைரவா, கைதி, கேஜிஎஃப் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மாளவிகா அவினாஷ். இவர் திடீரென மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில்,
‘உங்களில் யாருக்காவது ஒற்றை தலைவலி இருந்தால் அதை சாதரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பாரம்பரிய மருத்துவம் உள்பட எதையும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
இது சாதாரண தலைவலி என்பதைவிட வேறு சிக்கல்களையும் கொண்டு வந்துவிடும். அதுதான் எனக்கும் நடந்துள்ளது. டாக்டரின் அறிவுறுத்தல் இல்லாமல் நானே மருந்து எடுத்து கொண்டதால் இப்போது அனுபவிக்கிறேன்.
இந்த ஒற்றை தலைவலியை சாதரணமாக எடுத்துக்கொண்டால் என்னைப்போல் நீங்களும் மருத்துவமனையில் இருக்க வேண்டியது வரும்’ என பதிவிட்டுள்ளார். மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் மாளவிகா வெளியிட்டுள்ளார்.
அதில் அவரது முகம் வீங்கியிருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ‘இனி டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்து கடைகளில் நாமாக மருந்து கேட்டு வாங்க மாட்டோம்’ என ரசிகர்கள் கமென்ட் அளித்து வருகிறார்கள்.