சிலம்பம் கற்கும் நடிகை மாளவிகா மோகன் இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்காக

0
7

சிலம்பம் கற்கும் நடிகை மாளவிகா மோகன் இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்காக. தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெகு பரப்பரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மாளவிகா.

மாளவிகா மோகன் தமிழ், கன்னடம், இந்தி ஆகிய படங்களில் நடித்து பெயர் போனவர். கவர்ச்சியாக உடை அணிந்து அதை போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவையும் கடும் கோபத்தையும் சம்பாரித்தவர். எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்டிவாக இருப்பவரும் கூட.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகினார். பின்னர், இளைய தளபதி விஜயின் மாஸ்டர் படத்தில் அவரது ஜோடியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

சிலம்பம் கற்கும் நடிகை மாளவிகா மோகன் இயக்குனர் பா.ரஞ்சித் படத்திற்காக

தற்போது, தங்கலான் படத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் இயக்குகிறார்.இப்படம் கே.ஜி.எப் படபாணியில் கோலார் தங்க வயல் பிண்ணனியில் படம் உருவாகி வருகிறது. கதை தளம் வேறாக இருக்கும் இந்த படத்தில் விக்ரம் தனக்கே உரிய உடல் அமைப்பில் மாற்றம் கொண்டு வந்து நடித்துள்ளார். இதில் நடித்திருக்கும்  மாளவிகா மோகன் விறுவிறுப்பாக சிலம்பம் கற்று வருவதை தன் இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறார்.

இப்படத்தில் இவர்களுடன் பசுபதி, பார்வதி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், தங்கலான் படத்தில் மாளவிகா மோகன் இப்படத்தில் வரும் கேரக்டருக்கும் இவருக்கும் ஓத்து வராது என்று கூறி படத்திலிருந்து அவரை நீக்குதவதாகவும் சமூக வலைதளத்தில் வதந்தி பரவி வந்தது.

இதையும் படியுங்கள்: தங்கலான் படக்குழுவினர் தண்ணீரில் ஆட்டம் விக்ரம் மகிழ்ச்சி பதிவு

அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சிலம்பம் சுற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார் மாளவிகா மோகன். அவர் கூறியதாவது, சிலம்பம் என்னும் கலைக்குள் முதல் அடியை வைத்துள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here