நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் திருவிழாவான மாகாபலிபுரம்

0
13

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் திருவிழாவான மாகாபலிபுரம். சினிமா நட்சத்திரங்களின் கல்யாணம் என்றாலே திருவிழா போன்றே காணப்படும் அதிலும் 5 வருட காதல் திருமணம் கோலிவுட் நட்சத்திரங்கள் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை படை எடுக்கும் கூட்டங்கள் என பரப்பரபான மகாபலிபுர சாலைகள் சிறுசிறு விபத்துகளும் இதற்கிடையில் நன்முறையில் இருவரின் திருமணமும் சிறப்பாக நடந்தேறியது.

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். அவர்களின் திருமணம் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் திருவிழாவான மாகாபலிபுரம்
நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் திருவிழாவான மாகாபலிபுரம்

திருமணத்தை ஜூன் 9ஆம் தேதி திருப்பதியில் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் அங்கு திருமணம் செய்ய அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மகாபலிபுரத்தில் ஹெரட்டன் கிராண்ட் ரிசார்ட்டில் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இவர்களது திருமணம் முறைப்படி காலை 10.20 க்கு நடைப்பெற்றது. தமிழக சூப்பர் ஸ்டார் முன்னிலையில் ரஜினிகாந்த் கைகளால் தாலி எடுத்து கொடுக்க அதை விக்னேஷ் சிவன் நடிகை லேடி சூப்பர் ஸ்டார் கழுத்தில் கட்டினார். திருமணத்தை ஓட்டி ஓரு லட்சம் பேருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள் பலர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தி சென்றனர். பிரபலங்கள் அல்லாதோருக்கு QR CODE மூலமே அனுமதிக்கப்பட்டனர். மேலும் திருமணத்திற்கு வருபவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டது.

ஹாலிவுட் திரைப்படம் ஓன்றில் வரும் காட்சியை போல நயன்தார விக்னேஷ் சிவன் திருமணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 2018ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘Crazy Rich Asians’. இந்த படம் இடம்பெற்ற அழகிய திருமண காட்சி ஒன்று பல்வேறு ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது.

அதாவது ஒரு தாழ்வான நெல் வயலைப் போல உருவாக்கப்பட்ட இடைக்கழியில் தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். அதன் மேலே மணமகள் நடந்துவருவது போல் அந்த காட்சி உருவாக்கப்பட்டிருக்கும். இந்த கட்சியை அப்படியே பிரதிபலிக்கும் வகையில், அதே போல் ஏற்பாடு செய்யப்பட்டு மணமகள் நயன்தாரா மற்றும் மணமகன் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் நடந்து வந்தார்கள். நட்சத்திர ஜோடியின் இந்த அழகிய திருமண ஏற்பாடு காண்போரை வெகுவாக கவர்ந்தது.

இத்திருமணத்தில் வந்தவர்களும் நிறைய பரிசு பொருட்களை மணமக்களுக்கு வழங்கினர். விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு வைரம், வைடூரியம், மரகதம் நகைகள் என பல கோடி மதிப்பில் நயனுக்கு பரிசலித்தார். பதிலுக்கு நயன்தாரா விக்னேஷிற்கு பல கோடி மதிப்பலான பங்களாவை பரிசாக கொடுத்தார். இத்திருமணத்தை முன்னிட்டு தமிழகம் முழவதும் இருக்கும் பல முதியோர் இல்லத்திற்கும் குழந்தைகள் காப்பகங்களுக்கும் மதிய உணவு ஏற்பாட்டினையும் மணமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here