நடிகை பியா பாஜ்பாய் தமிழ், தெலுங்கு, மலையாளம்,ஹிந்தி ஆகிய அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர். பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் 2008 ஆம் ஆண்டு ‘பொய் சொல்ல போறோம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
அதையடுத்து ஏகன், பலே பாண்டியா, கோ, கோவா என பல படங்களில் நடித்து பாராட்டை பெற்றார். தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகிய ‘அபியும் அனுவும்’ என்ற படத்தில் நடித்தார்.
2021 ஆம் ஆண்டு ட்விட்டரில் ஒரு SOS அழைப்பை வெளியிட்டார், தனது சகோதரர் “இறந்து கொண்டிருப்பதால்” அவருக்கு அவசரமாக வென்டிலேட்டர் படுக்கை தேவை என்று எழுதினார். இரண்டு மணிநேரம் கழித்து அவரே ட்விட்டரில் இனி என் சகோதரா் இல்லை என்று வெளியிட்டார்.
அதே வருடம் இந்துக்கள் பண்டிகை மட்டும் தான் தெரியும் பக்ரீத் பண்டிகை தெரியாது, எனறு கூறி சமூக வளைத்தளங்களில் நெட்டீசன்களிடம் மாட்டிக் கொண்டார்.
திரைப்பட தயாரிப்பாளர் அனிருத்தா ராய் சௌத்ரியின் அடுத்த படமான ‘லாஸ்ட்’ படத்தில் நடிகை பியா பாஜ்பாய் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்றும் தெரிகிறது.
இதற்கிடையில் ”எனக்கு 15 வயது இருக்கும் போது நான் வீட்டை விட்டு வெளியேறி டெல்லி சென்றேன். அப்போது தங்குவதற்கு இடமில்லாமல் 2 இரவுகள் டெல்லி ரயில் நிலையத்திலேயே தூங்கினேன். பின்பு எப்படியோ மும்பை சென்று, வீடு கிடைக்காமல், ஓரு வீட்டின் உரிமையாளரின் நாய் இருக்கும் அறையில் நாயுடன் 9 மாதங்களுக்கும் மேலாக தங்கியிருந்தேன். ஆனால், எல்லா போராட்டத்திற்கும் பிறகு ஓரு நல்லது நிச்சயம் நடக்கும்” என நிகழ்ச்சி ஓன்றில் தனது அனுபவங்களை பகிர்ந்தார் நடிகை பியா பாஜ்பாய்.
அனைவரது வாழ்விலும் ஓரு ஏற்றம் ஓரு இறக்கம் இருக்கும் இன்பம் துன்பம் என அனைத்தும் கலந்து இருப்பது மறுக்க முடியாத உண்மை. எல்லா வித துன்பத்திற்கும் கஷ்டத்திற்கும் நிச்சயம் வாழ்க்கை பதில் சொல்லும். அனைத்தையும் தாண்டி உறுதியுடன் வாழுந்து வரவேண்டும்.