“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் இணைகிறார் நடிகை பிரியங்கா மோகன்

0
13

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் இணைகிறார் நடிகை பிரியங்கா மோகன் இப்படம் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் தொடர்ந்து வரிசை கட்டி படங்கள் வெளியாக காத்துக் கொண்டு உள்ளது. திருச்சிற்றம்பலத்தின் வெற்றியை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், தனுஷின் அடுத்தப்படம் டிசம்பர் 2ல் வெளியாவதாக வாத்தி படத்தின் படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

இந்த இரு படங்களை தொடர்ந்து அடுத்த படமான கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ் இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளாதாக தகவல் வந்துள்ளது. மேலும், இந்த படத்தில் ‘மாநகரம்’ படத்தின் மூலம் பிரபலமான சந்தீப் கிஷான், நடிக்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

“கேப்டன் மில்லர்” திரைப்படத்தில் இணைகிறார் நடிகை பிரியங்கா மோகன்

கேப்டன் மில்லர் படத்தின் ஷூட்டிங்கில் இணையவுள்ளார். 1930-40 களில் நடந்த சம்பவங்களாக கேப்டன் மில்லர் படம் பீரியட் மூவியாக உருவாக்கப்படுகிறது. தனுஷின் பிறந்த நாளையொட்டி வெளியான கேப்டன் மில்லர் படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சாணிக் காயிதம், ராக்கி படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் சார்பாக டி.ஜி. தியாகராஜன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீண்ட முடி மற்றும் தாடியுடன் தனுஷ் காட்சியளிக்கிறார்.

 

இது போன்ற தகவல்களை பெற மற்றும் ஆன்மீகம், உடல்நலம், ஜோதிடம், தமிழ் இலக்கியம், ஜாதக பொருத்தம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here