நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

0
12

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் சமீபத்தில் மயோடிசிஸ் என்ற தோள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் அதற்கான மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தகவல்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா தன் திறமையான நடிப்பாள் பல ரசிகர்களை பெற்றவர். சமீபத்தில் கூட யாசோதா படத்தின் டப்பிங் பணிகளை மருத்துவமனையிலிருந்து செய்ததை சமூக வலைதளப்பதிவில் தெரிவித்திருந்தார். மேலும், தான் மயோடிசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு தற்போது நலம் அடைந்து வருவதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், யசோதா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படத்தில் வாடகைத்தாயை மையமாக வைத்து எடுக்கபட்டுள்ளது யசோதா திரைப்படம். வாடகைத்தாய் என்பது குழந்தை பெற இயலாதவர்களுக்கு வரப்பிராசாதமாக கருதப்படுகிறது.

நடிகை சமந்தா மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தனது நடிப்பு திறமையாள் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் தற்போது இந்த படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இது பான் இந்தியா படமாக வெளியாகி உள்ளது. மேலும், இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா, சம்பத் ராஜ், சத்ரு, மதுரிமா, கல்பிகா கணேஷ், திவ்யா ஸ்ரீபாதா, பிரியங்கா சர்மா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: உடல்நல குறைவால் மருத்துவமனை சென்ற கமல்ஹாசன் வீடு திரும்பினார்

படத்தின் தொழில்நுட்பக் குழுவில், இசையமைப்பாளராக மணி சர்மா, ஒளிப்பதிவாளராக சுகுமார் மற்றும் எடிட்டராக மார்த்தாண்ட வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர். ஸ்ரீதேவி மூவிஸ் பேனரில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இப்படத்தை தயாரித்துள்ளார்.இப்படம் நவம்பர் 11-ம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மீண்டும் சமந்தா ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எந்த காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எதுவாயினும் விரைவில் உடல்நலம் பெற்று திரைவுலகிற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here