சமந்தா: மயோசிடிஸ் எனும் தசை அழற்ஜி நோயால் தீவிர சிகிச்சை பெற்று வரும் சமந்தா, தற்போது உடல்நிலை தேறி வருகிறார். தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘சாகுந்தலம்’ படம் தமிழிலும் டப்பிங் செய்யப்படுகிறது. இது தவிர அவர் ‘சிட்டாடல்’ என்ற இந்தி வெப்தொடரில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்புக்காக தற்போது அவர் மும்பை சென்றுள்ளார். மேலும் அவர் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஷிவா நிர்வானா இயக்குகிறார்.
இதன் படப்பிடிப்பு 60% முடிவடைந்த நிலையில் திடீரென்று சமந்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது சிறிய இடைவெளிக்கு பிறகு சமந்தா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், ‘நான் நடிக்கும் ‘குஷி’ படத்தின் ஷீட்டிங் விரைவில் தொடங்குகிறது. இப்படத்தின் தாமதத்துக்கு விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னிக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.