ராங்கி திரைப்படத்தில் நடித்துள்ள த்ரிஷா அப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது பல கேள்விக்கு பதில் அளித்தார். இந்த படம் வருகிற 30ந் தேதி திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடிகை த்ரிஷா விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படத்தின் மூலம் அனைவரும் அறியும் நடிகையாக இருந்தார். நடிகையாக வருவதற்கு முன்னர் சென்னை அழகியாக 1999ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், தனக்கு வரும் பட வாய்ப்புகளில் மிகுந்த ஈடுபாடுகளுடன் கதையை தேர்ந்தெடுத்து நடிக்க ஓப்புக் கொண்டார்.
தற்போது, தமிழ் நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ், த்ரிஷா போன்றோர் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை அம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ராங்கி படமும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமாக உருவாகியுள்ளது.

நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்றவர். தற்போது, எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் இயக்கியுள்ள ராங்கி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பு பணிகளை லைகா நிறுவனம் செய்து வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் கதை எழுதி இருக்கிறார்.
இந்த படத்தில் அனஸ்வர ராஜன், ஜான் மகேந்திரன், லிசி ஆண்டனி, கோபி கண்ணதாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். சக்திவேல் ஓளிப்பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. வருகிற 30ந் தேதி திரையரங்குக்கு வருகிறது.
இதனையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது திருமணத்தை பற்றி கேட்ட கேள்விக்கு த்ரிஷா இனிமேல் இது போன்ற கேள்வியை கேட்காதீர்கள் என்றார். அரசியலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக என்ற கேள்விக்கும் மறுத்து விட்டார். மேலும், விஜய், அஜித் இருவரையும் பிடிக்கும் இருவரின் திரைப்படங்களையும் விரும்பி பார்ப்பேன் என்றும் கூறினார்.
இதையும் படியுங்கள்: பென்னியின் செல்வன் படக்குழு இன்று புதிய அறிவிப்பை வெளியிடுகிறது
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.