உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார் அதானி

0
21

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார் கௌதம் அதானி ஆசிய கண்டத்தை சேர்ந்த ஓருவர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெறுவது இதுவே முதன் முறை.

137.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை முந்தி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இப்போது தரவரிசையில் அமெரிக்காவின் எலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.

ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறினார்.

உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்தார் அதானி

இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி சில ஆண்டுகளாக அசூர வளர்ச்சி கண்டு வருகிறார். அனைத்து துறையிலும் கால் பதித்து வெற்றி பெற்றுவருது குறிப்பிடத்தக்கது. இவர் துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி துறை, தொலைத்தொடர்பு துறை என அனைத்திலும் வளர்ச்சி பெற்று வருகிறார்.

தற்போது, புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின் படி, இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி, பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்டை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது பெரிய பணக்காரர் ஆனார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டில் ஒரு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த நபர் முதல் மூன்று இடங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை என குறிப்பிட்டுள்ளது.

91.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 11வது இடத்தில் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here