ஆதிச்சநல்லூரில் அகழ்வாய்வில் வெண்கலத்தால் ஆன நாய், ஆடு, மான் உருவங்கள் கண்டுபிடிப்பு.
சங்க காலத்திலிருந்து தமிழ் குடிகள் வாழ்ந்து வந்தார்கள் என்பதற்கு இலக்கியங்கள் இருந்த போதிலும் அது வெறும் கட்டுக் கதை என்று சொல்பவர்களுக்கு தொடர்ந்து தன் ஆழமான அழ்வாய்வு மூலம் சங்க தமிழன் வாழ்ந்தான் என்பது போல பல அரிதான பொருட்கள் மீண்டும் மீண்டும் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது.
ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில் எண்ணற்ற பொருட்கள் இதுவரை கிடைத்து வந்துள்ளது. தற்போது தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்திருந்தது. இதனையடுத்து அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் மூன்று இடங்களை தேர்வு செய்து அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த அகழாய்வு பணியில் கண்டுபிடிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இங்கு அமைய உள்ள உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இதுவரை நடந்த அகழ்வாய்வுப் பணியில் ஏராலமான பொருட்கள் கிடைத்துள்ளது. நெற்றிப்பட்டம், முதுமக்கள் தாழிகள், இரும்பு பொருட்கள், சங்க கால வாழ்விடப் பகுதிகள், தங்கத்தாலான பொருட்கள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் என பல பொருட்கள் பல நாட்களாக கிடைத்து வந்துள்ளது.
தற்போது, ஆதிச்சநல்லூர் பரும்பு பகுதியில் பாண்டியராஜா கோவில் அருகில் நடைபெற்ற அகழாய்வில், ஏற்கனவே தங்க ஆபரணங்கள் கண்டறியப்பட்ட குழியிலேயே தற்போது வெண்கலத்தாலான அலங்கார பொருட்களும் கண்டறியப்பட்டு உள்ளன.
வெண்கலத்தாலான நாய், மான், ஆடு உருவங்கள், நீர்கோழி, மீன் பிடிக்க பயன்படும் தூண்டில் முள், மரத்தால் ஆன கைப்பிடி கொண்ட கத்தி, இரும்புவாள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக அகழ்வாய்வு பணிகளில் ஈடுப்பட்டு வருபவர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.