சமந்தா: நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்கு வெளிநாடு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது சமந்தா நேற்று மும்பை விமான நிலையத்துக்கு வந்திருக்கிறார். அதன் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. ஸ்டைலான உடையில் அவர் மெதுவாக நடந்து செல்லும் வீடியோவை பார்த்து சமந்தா ரசிகர்கள் கலக்கமடைந்து இருக்கின்றனர். சமந்தா விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
பாலிவுட் வெப் சீரிஸ் சிட்டாடல் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக சமந்தா மும்பை வந்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில தினங்கள் முன்பு இந்த வெப் தொடரில் இருந்து அவர் வெளியேறிவிட்டார் என செய்திகள் வெளியாகின. ஆனால் சமந்தா தரப்பினர் அந்த தகவலை மறுத்து வந்தனர்.
நடிகை சமந்தாவின் ‘யசோதா’வுக்குப் பிறகு சகுந்தலம் பட வர உள்ளது. மறுபுறம் குஷி தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். விரைவில் குஷி படத்தின் மற்றொரு ஷெட்யூலிலும் அவர் இணைய உள்ளார். ஷிவா நிர்வாணா இயக்கும் இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கிறார். சமந்தாவின் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் குஷி படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாத காலமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.