AK 62க்கு பிறகு ஓன்றரை வருடம் இடைவெளி எடுக்க நடிகர் அஜித் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
நடிகர் அஜித் குமார் சினிமா உலகின் மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றவராக உள்ளவர். பல வெற்றி படங்களை பெற்று தந்தவர் முன்னணி நடிகராக வலம் வருபவர். தற்போது ஏகே 62 க்கு பிறகு ஓன்றரை வருடம் இடைவெளி எடுத்துக் கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
இரண்டு பைக்குகளுடன் 60 நாடுகளை சுற்றி பார்க்க நடிகர் அஜித் திட்டம் இதன் காரணமாக திரைப்படங்களுக்கு சிறிது இடைவெளி தரப்போவதாக கூறப்படுகிறது. துணிவு படத்தின் முழுப் படப்பிடிப்பு முந்துள்ள நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படமும் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் வரும் ஆண்டு பொங்களுக்கு ரீலிசாக காத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2014 ம் ஆண்டுக்கு பிறகு இருவரின் படமும் ஓன்றாக ரீலிஸ் ஆவது இதுவே முதன் முறையாக உள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், நடிகர் அஜித் துணிவு படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்து விட்டு தாய்லாந்து புறப்பட்டார் பின் தாய்லாந்து முழுவதும் தன் பைக்கில் ரைடி செய்து வந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.
இதையும் கவனியுங்கள்: அஜித் தாய்லாந்தில் பைக் ரைடு இணையத்தில் புகைப்படம் வைரல்
நேற்றே தன் பயணங்களை முடித்து கொண்டு சென்னை திரும்பினார். இந்த நிலையில் மீதமுள்ள துணிவு படத்தின் டப்பில் பணிகளை முடித்து விடுவார். அதற்குபின், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள ஏகே 62 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு ஓன்றை வருடம் இடைவெளி பெற போவதாக அறிவித்துள்ளார்.
பைக் பயணங்களில் தீராத காதல் கொண்ட காதல் மன்னனுக்கு அடுத்தப்படியாக உலகம் முழுவதும் உள்ள 60 நாடுகளில் பைக்கில் ரைடு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்காக இந்த முடிவை எடுத்துள்ளார் நடிகர் அஜித். இதனால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்து வருத்ததில் ஆழ்ந்துள்ளனர்.