இந்தி நடிகர் ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானை இயக்க தயாராகும் இயக்குனர் அட்லீ

0
7

அட்லீ:  கோலிவுட்டில் ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ குமார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யுடன் இணைந்து மூன்று வெற்றிப் படங்களை கொடுத்தார். நடிகர் விஜய் அவர்களுக்கு தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து தமிழின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரானார். அதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கான் அவர்களை இயக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டார். பான் இந்தியா படமாக உருவாகும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோன், விஜய் சேதுபதி, நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

atlee's next project committed by salmankhan

அடுத்த ஆண்டு 2023 ஜீன் 2ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜவான் படத்தை தொடர்ந்து அட்லீ தமிழில் விஜயின்  68 வது படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. ஜவான் படத்தை தொடர்ந்து அவர் பாலிவுட்டின் மற்றுமொரு உச்ச நட்சத்திரமான சல்மான்கானை இயக்கப்போவதாக தகவல்கள் பரவியுள்ளது. ஜவான் பட ஷீட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே சல்மான்கானை சந்தித்து காமெடி படத்திற்கான கதை ஒன்றை அட்லீ கூறியிருக்கிறாராம். அட்லீ படங்கள் சல்மான் கானுக்கு பிடித்துப்போகவே அவரும் அடுத்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக பாலிவுட்டில் தகவல்கள் பரவியுள்ளது. விரைவில் சல்மான் கான்- அட்லீ படம் குறித்த தகவல்கள்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here