பாபா ரீ-ரிலிசை அடுத்து மற்றுமொரு படத்தை ரீரிலிஸ் செய்ய முடிவு. 2002 ம் ஆண்டு வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்திய பாபா ஆன்மீகமும் அரசியலும் கலந்த படமாக மக்கள் மத்தியில் வெளியாகியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்திய சினிமா உலகின் தவிர்க்க முடியாத நபராகவும் இன்றளவும் தன் மார்க்கெட் குறையாதவராகவும் ரசிகர்களால் கொண்டாடப்படுபவராகவம் இருந்து வருகிறார். வருகிற 12ம் தேதி தனது 73வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தனது எழுத்து மற்றும் தயாரிப்பால் உருவான பாபா படத்தை ரீரிலிஸ் செய்து இன்று வெளியிட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார்.
இந்த படத்தில் கவுண்டமணி, மணிஷாக் கொயிராலா, விஜயகுமார் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் முழுக்க முழுக்க ஆன்மீகம் மற்றும் அரசியல் கலந்த படமாக வலம் வந்தது. இருப்பினும் இப்படத்தில் காதல், நகைச்சுவை, அன்பு, ஆன்மீகம், அரசியல் என பல வண்ண கலவையாக வெளியானது.

தற்போது, அதனை மெருகேற்றி இன்றுள்ள இளைஞர்கள் மத்தியில் எந்த அளவு வரவேற்பை பெறும் அளவில் பல மாற்றங்களை செய்தும் முற்றிலும் டிஜிட்டல் வடிவிலும் கலரிங் செய்தும் இசையின் அளவை மாற்றியும் பல காட்சிகளை நீக்கியும் டப்பிங் கொடுத்தும் முக்கியமாக க்ளைமைக்ஸ் காட்சியை நீக்கி வேறு காட்சியை வைத்தும் இப்படம் இப்போது வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்: பாபா ரீ-ரிலிஸில் க்ளைமெக்ஸ் காட்சி மாற்றம் ரசிகர்கள் ஆராவாரம்
இதனை அடுத்து 2007ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் உருவாகி மிகப் பெரும் பிளாக் பஸ்டர் படமாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற சிவாஜி படத்தையும் ரீ-ரிலீஸ் செய்துள்ளனர். மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இப்படம் வருகிற டிசம்பர் 15-ந் தேதி வரை திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.