அக்னிபத் திட்டத்தில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்

0
25

அக்னிபத் திட்டத்தில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இராணுவப் பணிக்கு நான்காண்டுகள் ஓப்பந்தத்தின் அடிப்படையில் பணியாற்ற தகுதியான மற்றும் விருப்பமுள்ள இளைஞர்கள் ஜூன் 24 ம் தேதி முதல்  http://joinindianarmy.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஓன்றிய அரசு அறிவித்துள்ளது.

இராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை கடந்த 14ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. 17.5 வயதிலிருந்து 21 வயதுக்குள் இருப்பவர்கள் 4 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் ராணுவத்தில் நியமிக்கப்படுவார்கள். பணிக்காலம் முடிந்து செல்வோரில் 25 சதவீதம் நிரந்தப்பணிக்கு அனுப்பப்படுவார்கள். இந்தத் திட்டத்துக்கு நாடுமுழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியதைத் தொடர்ந்து வயது வரம்பை 23 ஆக மத்திய அரசு உயர்த்தியது. இந்தத் திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு அக்னிவீரர்கள் என்று பெயர்.

அக்னிபத் திட்டத்தில் சேர ஜூன் 24 முதல் விண்ணப்பிக்கலாம்

இத்திட்டத்திற்கு நாடு முழுவதும் தொடர்ந்து பல எதிர்ப்பு குறல்கள் இருந்த வண்ணம் உள்ளது. பல மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது. பல அரசு வாகனங்கள் முதல் பொது மக்கள் பயன்படுத்தும் ரயில்கள் வரை எரிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு எதிர்கட்சிகளும் எதிர்த்து வருகிறுது. இப்போராட்டத்தில் 700 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பீடு ஏற்ப்பட்டு இருப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஆனந்த் மகேந்திரா கூறுகையில், இது ஓரு நல்ல திட்டம் அக்னிபத் திட்டத்தில் சேர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றி வெளியில் வரும் இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப தன் நிறுவனத்தில் வேலை வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இந்திய விமானப் படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://careerindianairforce.cdac.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களைளுக்கு ஆன்லைன் தேர்வு வரும் ஜூலை 24ஆம் தேதி நடத்தப்படும் என்றும் இந்திய விமானப் படை அறிவித்துள்ளது.

விமானப் படையில் சேர்வதற்கு, https://indianairforce.nic.in/ அல்லது https://www.careerindianairforce.cdac.in/ என்ற இணையதளங்களில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும். இந்த ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகிற 24ஆம் தேதி காலை 10 மணி முதல், ஜூலை 5ஆம் தேதி மாலை 5 மணி வரை பயன்பாட்டில் இருக்கும்.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய விரும்புவோர், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ், பிளஸ் 2 வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது 3 ஆண்டுகள் பொறியியல் டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ் அல்லது 2 ஆண்டுகள் தொழில்சார்ந்த படிப்புக்கான மதிப்பெண் சான்றிதழ் அல்லது தொழில்சார்ந்த படிப்பல்லாத இரண்டு ஆண்டு ஆங்கிலம், இயற்பியல், கணிதம் படித்தவர்கள் மதிப்பெண் சான்றிதழை இணைக்க வேண்டும்.

தேர்வுக் கட்டணமாக ரூ.250-ஐ செலுத்த வேண்டும். அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப் படையில் சேர 1999,29 டிசம்பர் முதல் 2005ஆம் ஆண்டு ஜூன் 29ஆம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here