சபரிமலைக்கு மட்டும் அல்ல எந்த கோவிலுக்கும் யார் வேண்டுமானாலும் செல்லலாம் இவர் செல்லலாம் இவர் செல்லக் கூடாது என்று எந்த கடவுளும் சொல்லவில்லை நாம் தான் சட்டம் வகுத்து செயல்படுகிறோம் எனவும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேச்சு.
தமிழில் காக்கா முட்டை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ் பல முக்கிய படங்களில் அனைத்து வித கெட்டப்புகளில் நடித்து வருபவர். சமீபத்தில் வெளியான டிரைவர் ஜமுனா படத்திலும் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருபவர்.
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ திரைப்படம் தமிழில் ரீமேக்காகியுள்ளது. இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராகுல் ரவீந்திரன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ஐஸ்வரியாவிடம் ”சபரிமலையில் பெண்கள் அனுமதி மறுக்கப்படுவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு கடவுள் உயர்ந்தவர் தாழ்ந்தவர் எப்படி பார்ப்பது இல்லை என நம்புகிறோமோ அது போல ஆண் பெண் என்ற பாகுபாடு பார்ப்பதில்லை. எந்த கடவுளும் நீ தீட்டு என்று கூறி ஓதுக்கவில்லை. மனிதானாகிய நாமே சட்டத்தை வகுத்து கொண்டது என்று கூறினார்.
சபரிமலை மட்டும் இல்லை, எந்த கோயிலிலும் எந்த கடவுளும் பக்தர்களுக்கு கட்டளை பிறப்பிக்கவில்லை. இது சாப்பிடக்கூடாது, இது தீட்டு என எந்தக் கடவுளும் சொல்லவில்லை, இதையெல்லாம் நாம் தான் கிரியேட் பண்ணியிருக்கிறோம். இதற்கும் கடவுளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தான் நான் சொல்வேன். பீரியட்ஸ் நேரத்தில் அதை செய்யக் கூடாது, இதை செய்யக் கூடாது, கோயிலுக்கு வரவில்லை என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. அதை உருவாக்கியது மக்கள் தான். நான் எப்போதும் இதை நம்புவது கிடையாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: BIGG BOSS 6: இறுதி வரை பங்கு பெற்ற ஷிவினின் சம்பள விவரம்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.