ஐஸ்வரியா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் ரீலிஸ் தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனித்துவமான நடிப்பின் மூலம் அறிமுகமாகி சிறப்பான முறையில் நடிப்பில் முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் சரி தங்கையாக இருந்தாலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கு என்று தனி இடத்தை பெற்றுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தற்போது கேப் டிரைவராக டிரைவர் ஜமுனா படத்தில் கதாநாயகியாக நடித்து வந்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘வத்திக்குச்சி’ படத்தின் இயக்குநர் கிங்ஸ்லின் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. 18 ரீல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆர்.ராமர் படத்தொகுப்பு செய்கிறார்.

க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் கேப் (cab) டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு என இப்படம் நான்கு மொழிகளில் வெளியாகின்றது.
இதையும் கவனியுங்கள்: காட் ஃபாதர் மற்றும் கோஸ்ட் படங்கள் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது
ட்ரெய்லரை பொறுத்தவரை கேப் டிரைவராக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ், கொலை செய்ய செல்லும் கும்பல் ஒன்றிடம் சிக்கிக்கொள்கிறார். போலீஸுக்கும், கொலைகார கும்பலுக்குமான சண்டையில் இடையில் சிக்கிக்கொள்ளும் ஐஸ்வர்யா ராஜேஷ் கொலைகார கும்பலை எப்படி சமாளிக்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லும் படமாக ‘டிரைவர் ஜமுனா’ இருக்கும் என்பதை இந்த ட்ரெய்லர் உணர்த்துவதாக சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நயன்தாராவின் ஓடுவின் படத்தில் பெண் கதாபாத்திரம் சிறப்பான வரவேற்பை ஏற்படுத்தியது. அதுபோல இப்படத்தில் ஐஸ்ர்யா ராஜேஷின் கதாபாத்திரமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், இப்படம் ரிலீஸ் நவம்பர் மாதத்தில் இருக்கும் என தன் டிவிட்டர் கணக்கில் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா.
Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres from November@kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy #AnlArasu @thinkmusicindia #RRamar @ThatsKMS @reddotdzign1 @Synccinema @knackstudios_ @ahatamil @proyuvraaj pic.twitter.com/pDuoNjI120
— aishwarya rajesh (@aishu_dil) October 5, 2022
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை அனுகுங்கள்.