அஜித்தின் 61 வது படத்தின் புதிய அப்டேட்மே 1 ம் தேதிக்குள் ஏதாவது புதிய அறிவிப்புகள் அப்டேட் கிடைக்காதா என ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றனர். தல அஜித்தின் வலிமை உலகமெங்கும் பெரும் வெற்றி கண்டுள்ளது. பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
அன்மையில் அஜித் குடும்பத்தினர் தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்தது முதல் அஜித் ஷாலினி இருவரும் லவ் மூடில் இருக்கும் படங்களும் சமூகவலை தளங்களில் வெளியாகி ரசிகர்கள் மகிழ்ந்தனர். ஏகேவின் திருமண நாளையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

இதற்கிடையில், ஐதராபாத் புறநகர்ப் பகுதியான ஹைடெக் சிட்டி அருகே அமைந்துள்ள அலுமினியம் ஃபேக்டரி ஏரியாவில், சென்னை அண்ணாசாலையை பிரமாண்டமாக செட் போட்டு, விறுவிறுப்பாக ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்களாம். இன்றைய தேதிக்கு அஜித் ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருக்கிறார். அடுத்த 15 நாள்கள் இந்தப் பகுதியில் ஷூட் இருக்குமெனத் தெரிகிறது. பிறந்த நாளான மே முதல் தேதி அஜித் அங்கு இருப்பாரா அல்லது சென்னை வந்துவிடுவாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை.
அஜித் 61 வது படத்தை இயக்குனர் வினோத், தயாரிப்பு போனிக்கபூர் என்பது தெரிய வருகிறது. இப்படத்தின் கதை ஓரு வங்கியை கொள்ள அடிப்பது இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடவேண்டும் என்பதில் படக்குழு உறுதியாக உள்ளதால் அதற்கேற்றபடி ஷூட்டிங்கைத் திட்டமிட்டு விரைவுபடுத்தி வருகிறார்களாம்.
எந்த ஓரு பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பினாலும் முயறிசியினாலும் திரைத்துறைக்கு வந்ததால் தான் இவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனரா என தெரியவில்லை. அஜித் ரசிகர்களுக்கு இந்த சிறிய தகவல் அவர்களை மகிழ்விக்கும் என்று நினைக்கிறேன்.