ஏகே 62: கடந்த பொங்கலன்று வெளியான ‘துணிவு’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் அஜித்தின் அடுத்த படத்தையும் தயாரிக்கிறது. அஜித் நடிக்கும் அடுத்த படமான 62 வது படத்தை இயக்க இயக்குனர்கள் தேர்வு நடைபெற்று வந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவன் சொன்ன கதை அஜித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காததால் அவர் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அஜித் ஒரு ஆக்ஷ்ன் கதையை எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலினின் ‘கலகத் தலைவன்’ படத்தை இயக்கிய மகிழ் திருமேனி அஜித்தின் 62வது படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அவர் தற்பாது அஜித் படத்துக்கான திரைக்கதை அமைப்பு பணிகளில் பிசியாக ஈடுபட்டுள்ளார். இந்த படம் போதை பொருள் மாஃபியா கும்பலை பற்றியது என ஒரு தரப்பு சொல்கிறது. படத்தில் யாரையும் புண்படுத்தும் காட்சிகள் இருக்கக் கூடாது என மகிழ் திருமேனிக்கு அஜித் உத்தரவு போட்டுள்ளாராம். அதற்கேற்ப மாற்றங்கள் செய்யப்படுகிறது. படத்துக்கு ‘டெவில்’ என்ற தலைப்பு வைக்கலாமா என படக்குழு யோசித்து வருகிறது. ஆனால் அஜித் தரப்பு அதற்கு இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லையாம். இந்த படத்திற்கான ஹீரோயின் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வும் ஜரூராக நடந்த வருகிறது.