அஜித்குமார்: லைகா நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிக்கும் படத்துக்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த படத்தில் நடிக்க முதல்முறையாக ரூ.100 கோடி சம்பளமாக அஜித் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தார். ஆனால் அவர் சொன்ன கதை அஜித்துக்கு பிடிக்கவில்லை. இதை ஆக்ஷ்ன் படமாக தர வேண்டும் என அஜித் விரும்பினார். அதற்கேற்ப கதை உருவாக்க முடியாமல் விக்னேஷ் சிவன் திணறினார். இதையடுத்து அவர் அதிரடியாக படத்திலிருந்து நீக்கப்பட்டார். நயன்தாரா சிபாரிசு மூலம்தான் விக்னேஷ்க்கு வாய்ப்பு தர அஜித் சம்மதித்து இருந்தாராம். ஆனால் கதையே உருவாக்க முடியாத இயக்குனருடன் பணியாற்ற அஜித் விரும்பாமால் விலகியிருக்கிறாராம்.
இதையடுத்து ஆக்ஷ்ன் த்ரில்லர் வகையறா படங்களுக்கு பெயர் போன மகிழ் திருமேனியை அழைத்து அஜித் கதை கேட்டார். அஜித் விரும்பியது போல் இந்த கதையில் அனைத்து அம்சங்களுடன் ஆக்ஷ்ன் அதிகமாக இருப்பதால் நடிக்க ஒப்புக்கொண்டார். அதே சமயம் மகிழ் திருமேனிக்கு அஜித் ஒரு உத்தரவு போட்டுள்ளார். அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பை நான்கே மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என அஜித் கூறிவிட்டாராம். விஜய் நடிக்கும் ‘லியோ’ படம அக்டோபர் 19ம் தேதி ரிலீசாகிறது. அதே நாளில் தனது படத்தையும் ரிலீஸ் செய்ய அஜித் திட்டமிட்டுள்ளாராம்.