அஜித் குமார்: ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். வினோத், போனி கபூர், அஜித் மூவரின் கூட்டணியில் ஏற்கனவே ‘நேர் கொண்ட பார்வை’, ‘வலிமை’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ள நிலையில் அவர்கள் கூட்டணியில் வெளிவரும் மூன்றாவது படமாக துணிவு உள்ளது. இப்படம் வரும் பொங்கலன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதே தினம் விஜய்யின் ‘வாரிசு’ படமும் வெளியாக உள்ளதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 8 வருடங்களுக்கு பிறகு விஜய், அஜித் படங்கள் ஒரே நாளில் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தகக்து.
துணிவு படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் சிங்கிளான ‘சில்லா சில்லா’ பாடல் ஏற்கனவே வெளியாகி அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்று மதியம் துணிவு படத்தின் இரண்டாவது பாடலான ‘காசேதான் கடவுளடா’ பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் வெளியாகி சில நிமிடங்களிலேயே இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. அஜித் ரசிகர்களுக்கு இப்பாடல் சன்டே ட்ரீட்டாக அமைந்துள்ளது.