துணிவு: 8 வருடங்களுக்கு பிறகு பொங்கலன்று விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒன்றாக மோதுகின்றன. இந்நிலையில் விஜய்யின் ‘வாரிசு’ படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அஜித்தின் ‘துணிவு’ ரிலீஸ் குறித்து எந்த அப்டேட்டும் இல்லாமல் சஸ்பென்ஸாகவே உள்ளது. இந்நிலையில் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் துணிவு படத்தின் ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ பாடல்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து இன்று காலை முதல் துணிவு படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் கதாபாத்திரங்கள் ட்விட்டரில் அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி மோகன சுந்தரம் மாய் பா என்ற கதாபாத்திரத்திலும், பிரேம் பிரேமாகவும், பக்ஸ் ராஜேஸாகவும், ஜான் கொக்கன் கிரிஷ் கதாபாத்திரத்திலும், சமுத்திரக்கனி தயாளானாகவும், மஞ்சு வாரியர் கண்மணி கதாபாத்திரத்திலும் நடித்து உள்ளதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அஜித்தின் கதாபாத்திரம் மட்டும் சஸ்பென்ஸாக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை மாலை 7 மணிக்கு ‘துணிவு’ படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வெளியாகும் டிரெய்லரில் அஜித்தின் கதாபாத்திரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏனென்றால் அஜித்குமார் பெயரைப் போட்டு கேள்விக்குறி ஒன்றுடன் உள்ள புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.