ஓடிடி தளம்: ‘பூலோகம்’ படத்தை தொடர்ந்து என்.கல்யாண்கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த படம் ‘அகிலன்’. இப்படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் நாயகிகளாக பிரியா பவானி சங்கர், தான்யா நடித்துள்ளனர். ரவிச்சந்திரன், ஹரீஷ் உத்தமன், மதுசூதன ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வரும் மார்ச் 31ம் தேதி ஜூ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது.
மேலும் ஜெயம் ரவி கீர்த்தி சுரேஷூடன் இணைந்து ‘சைரன்’ படத்திலும், நயன்தாராவுடன் இணைந்து ‘இறைவன்’ படத்திலும் நடித்து வருகிறார். அதே போல் கடந்த பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வந்த படம் ‘பகாசூரன்’. இப்படத்தில் கதையின் நாயகனாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் நடித்திருந்தார். இப்படத்தை மோகன்.ஜி இயக்கியிருந்தார். இப்படமும் வரும் மார்ச் 28ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.