ஆல்யா-ரன்பீர்: பாலிவுட்டின் பிரபல ஜோடியான ஆலியா பட்-ரன்பீர் கபூர் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் கடந்த ஜீலை 27ம் தேதி தான் கருவுற்றிருப்பதாக இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலமாக தெரிவித்திருந்தார் ஆலியா பட். இன்று காலை மும்பையில் உள்ள ஹெச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆல்யாவிற்கு மதியம் 12.15 மணியளவில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து ஆலியா பட் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘எங்கள் வாழ்க்கையின் முக்கியமான செய்தி இது. எங்கள் குழந்தை மிக அழகாக இருக்கிறாள். அன்பு நிறைந்த ஆசிர்வதிக்கப்பட்ட பெற்றோராக மாறியிருக்கிறோம்’ என குழந்தையை பற்றி பதிவிட்டிருக்கிறார். மேலும் அவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு ஆண் சிங்கமும், ஒரு பெண் சிங்கமும் தன் குட்டியுடன் இருப்பது போன்ற அழகான புகைப்படம் ஒன்றையும் இணைத்துள்ளார். ‘எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் நிரம்பி வழிகிறது. வாழ்க்கைக்கு நன்றி’ என ஆல்யா பட்டின் தாயார் சோனி ரஸ்டான் பதிவிட்டுள்ளார். மேலும் ஆல்யா-ரன்பீர் ஜோடிக்கு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.