தன் மகளின் பிறந்தநாளில் சமூக பணி செய்யும் ஆல்ரவுண்டர் ஜடேஜா. சர்வதேச கிரிக்கெட் முதல் உள்ளூர் கிரிக்கெட் வரை இவர் ஆல்ரவுண்டர். இன்று இந்திய மக்களுக்கு சேவை செய்வதிலும் ஆல்ரவுன்டராக அறியப்படுகிறார்.
கிரிக்கெட் உலகில் தவிர்க்க முடியாத வீரா்களில் ரவீச்சந்திர ஜடேஜாவும் ஓருவர் அவரின் துல்லியமான விளையாட்டு அவரின் ரசிகர்களை கவர்ந்து இழுக்கும் திறமையான விளையாட்டு கிரிக்கெட் வீரா்.

ரவீந்திர ஜடேஜா தனது மகளாகிய குன்வாரிபாஸ்ரீ நித்யானபாவின் 5 வது பிறந்தநாளையொட்டி வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தில் வாழும் பெண் குழந்தைகளின் நலனுக்காக ஓரு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டார். ஜடேஜாவும் அவரது மனைவியுமான ரிவாபா ஜடேஜா ஜாம்நகர் தபால் நிலையத்தில் இன்று 101 சுகன்யா சம்ருத்தி கணக்குகளை தொடங்கி ஒவ்வொரு கணக்கிலும் 11000 ரூபாய் செலுத்தி சேவை செய்துள்ளார்.
ஜடேஜா சமூக சேவை செய்வது புதியது இல்லை அவர் கொரோனா தொற்று இருந்த காலக்கட்டத்தில் தன் உள்ளுர் மக்களுக்கு தன் சகோதரி மூலம் பல உதவிகளை செய்துள்ளார். இதுவரை இந்தியாவின் பிரதமராக இருந்த 8 ஆண்டு காலத்தில் அவர் அளித்த உத்வேகத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு தம்பதியினர் நன்றி தெரிவித்தனர்.
சுகன்யா சம்ரித்தி திட்டம் பெண் குழந்தைகளின் கல்விக்காக பணத்தை சேமிக்க பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்திய அரசின் பிரபலமான திட்டமாகும். இது கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள் மற்றும் வரி சலுகைகளை வழங்குகிறது. இது 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தனது ‘பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ’ பிரச்சாரத்தின் கீழ் தொடங்கப்பட்டது.