அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் புதிய சாதனையை படைத்தது.
நடிகர் அல்லு நடிப்பில் வெளியான திரைப்படம் புஷ்பா இது இந்தியாவின் பான் இந்தியா படமாக பார்க்கப்படுகிறது. இப்படம் சூப்பர் டூப்பர் ஹீட் அடித்தது. வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது. இப்போது இந்தியாவில் உள்ள எந்த படங்களும் படைத்திராத சாதனை ஓன்றை படைத்துள்ளது.
புஷ்பா படத்தின் பாடல்கள் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளது. அதன்படி இந்திய அளவில் 5 பில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்ற முதல் ஆல்பம் என்கிற சாதனையை புஷ்பா படம் படைத்துள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுகுமார். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரிலீசான படம் புஷ்பா. அல்லு அர்ஜுன் நாயகனாக நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். மேலும் அனசுயா பரத்வாஜ், பகத் பாசில், சுனில், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்தது. பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்த இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றிக்கு தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் வெளியான பாடல்களும் முக்கிய பங்காற்றின.
இந்நிலையில், புஷ்பா படத்தின் பாடல்கள் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளது. அதன்படி இந்திய அளவில் 5 பில்லியனுக்கு மேல் பார்வைகளை பெற்ற முதல் ஆல்பம் என்கிற சாதனையை புஷ்பா படம் படைத்துள்ளது. இந்திய அளவில் எந்த ஒரு படமும் நிகழ்த்திராத ஆல் டைம் ரெக்கார்டை புஷ்பா படம் நிகழ்த்திக் காட்டி உள்ளதால் அப்படத்திற்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.